Towards the end ... Saravanan - Meenakshi TV series

சரவணன் - மீனாட்சி தொடரின் 3-வது சீசன் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முடிவடையப்போவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான இறுதிக்கட்ட காட்சிகள் சென்னை புறநகர் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் - மீனாட்சி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசன் சரவணன் - மீனாட்சி தொடரில் மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் நடித்தனர். 

ஆனால், தொடரின் பாதியில் இர்ஃபான் வெளியேற, வெற்றி தொடர்ந்தார். ஒரு மாதத்தில் அவரும் வெளியேற கவின் கமிட் ஆனார். கவின் - ரக்சிதா ஜோடி பிக் அப் ஆகி சீசன் நிறைவு பெற்றது.

அடுத்து ரக்சிதா - ரியோ நடிக்க மூன்றாவது சீசன் தொடங்கியது. முதல் இரண்டு சீசன்களைவிட மூன்றாவது சீசன் காதல் கதையாக ஆரம்பித்து பேய், சாமி என்கிற ரீதியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தனது குடும்பத்தினரை பழிவாங்க நினைக்கும் பேயிடம் இருந்து குடும்பத்தைக் காப்பாற்ற போராடுகிறாள் கதாநாயகி மீனாட்சி. தற்போது, ஒரு வழியாக சரவணன்-மீனாட்சி தொடர் கிளைமாக்சை எட்டிவிட்டது. 

ஜூலை முதல் வாரத்தில் முடிவடையப் போவதாக கூறப்படுகிறது. இதன் இறுதிக்கட்ட காட்சிகள் சென்னை புறநகரான குத்தம்பாக்கத்தில் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன.