சீசன் முடிந்தும் குற்றால அருவிகளில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்.. அலைமோதும் மக்கள் கூட்டம்..
சீசன் முடிந்த நிலையிலும் வார விடுமுறையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து, உற்சாகமாய் அருவியில் குளித்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டது.
மேலும் படிக்க:முகூர்த்தம் மற்றும் ஓணம் பண்டிகை எதிரொலி.. கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ.. கிலோ ரூ.2,500 க்கு விற்பனை..
இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுத்தனர். இங்கு வரும் பயணிகள் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து சென்றனர். இதனால் கடந்த இரு ஆண்டுளாக கொரோனா காரணமாக குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு மக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் கடந்த 3 மாதங்களாக சீசன் களைகட்டியது.
மேலும் படிக்க:அதிர்ச்சி!! குற்றாலத்தில் கடன் பிரச்சனை காரணமாக தந்தையும் மகளும் தற்கொலை.. தாய் கவலைக்கிடம்..
இந்த நிலையில் தற்போது சீசன் முடிந்த நிலையிலும் குற்றால அருவிகளில் நீர்வரத்து உள்ளதால, சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்று வாரவிடுமுறை தினம் என்பதால் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள், தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து, அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.