கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் நேற்று முந்தினம் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் நேற்று முந்தினம் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் பேச்சிப்பாறை அணையில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. இதனால் அருவியில் நேற்று முன் தினம் முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை வேகமாக நிரம்பி வருவதால், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் உபரிநீர் கோதையாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

கடந்த இரு நாட்களாக மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனிடையே பேச்சிப்பாறை அணை மறுகால் ஷட்டர் மூலம் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பேச்சிப்பாறை மறுகால் தண்ணீரும் சேர்ந்து வருவதால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று முன் தினம் முதல் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. மழை குறைந்த நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்தது. மேலும் கோதையாற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு குறைந்ததால், திற்பரப்பு அருவில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் திற்பரப்பு அருவில் குளிப்பதற்கு, நேற்று முன் தினம் முதல் விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது.

மேலும் படிக்க: உஷார் மக்களே!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..