தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நாள் முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் வெளியில்  வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில், நாளை வரலாறு காணாத வெப்பம் நிலவும் என்றும் மக்கள் வீட்டை விட்டு வெளிவர வேண்டாம் எனவும் சென்னை   வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என  சென்னை வானிலை ஆய்வு அறிக்கை  எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பயங்கர அனல் காற்று  வீசும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  

சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,நாகை, புதுக் கோட்டை,வேலூர், திருவண்ணாமலை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் , நாமக்கல்  ஈரோடு , கரூர்,திருச்சி, அரியலூர்,  பெரம்பலூரில் அதிக வெப்பம் நிலவும் என்றும் இதன் காரணமாக  அதிக வெப்ப காற்று  நிலவும் எனவும்  சென்னை வானிலை ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள  மாவட்ட ஆட்சியர்களுக்கு   அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர் .