முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு தமிழகத்திற்கு நாளை அரசு விடுமுறை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை மட்டுமின்றி, 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் தமிழக  அரசு அறிவித்து உள்ளது. கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். நாளை பள்ளி கல்லூரிகள்  மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால், மக்கள்  இப்போதே அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர். 

நாளை  வெள்ளிக்கிழமை என்பதாலும், அதனை தொடர்ந்து  வரும் இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால்  தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே மக்கள் அவரவர் ஊர்களுக்கு பயணம் செய்ய பேருந்து நிலையத்தில் அலை மோதுகின்றனர்.