Tomorrow begins in chennai 3 thousands tradition seeds rice festival
3 ஆயிரம் பாரம்பரிய விதைகள், தானியங்கள், நெல் வகைகள் உள்ளிட்ட பல அரிய வகைகளைக் கொண்டு தேசிய விதை வேற்றுமை திருவிழா சென்னை கிண்டியில் நாளை தொடங்குகிறது.
கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கும் இந்த திருவிழாவில் வழக்கில் இல்லாத விதைகள், தானியங்கள், பல மாநிலங்களில் பாரம்பரியாக விதைப்படும் தானியங்கள், நெல் வகைகள், பருப்பு வகைகள் உள்ளிட்டவை காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட உள்ளன.
விவசாயத்தின் அருமை மக்களுக்கு புரியத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் சென்று பார்வையிட்டால், வேளாண்மை பற்றியும், விதைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணத்துக்கு இங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு அரசியை நாம் சுடுநீரில் கொதிக்க வைத்து வேக வைத்து சாப்பிட வேண்டியத் தேவையில்லை.
தண்ணீரில் போட்டு சிறிதுநேரம் ஊறவைத்துவிட்டு அப்படியே சாப்பிடலாம். சுந்தரவனக் காடுகளில் மட்டுமே இந்த அரிசி கிடைக்கும். அதேபோல, இமாலயமலைப்பகுதியில் மட்டுமே விளையும் நவரங்கி பருப்பு என ஏராளமான தானியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த விதைத்திருவிழா நாடுமுழுவதிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட விதைப் பாதுகாவலர்களையும், சேகரிப்பவர்களையும் ஒன்று சேர்த்துள்ளது. இவர்கள் பலஆண்டுகளாக பாரம்பரியமாக பயிரிடப்படும் தானிய வகைகள், அழியும் நிலையில் உள்ள தானியங்கள் ஆகியவற்றின் விதைகளை இவர்கள் பாரமரி்த்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்வது, விதைகள் குறித்தும், நமது நாட்டின் பாரம்பரிய விவசாயம் குறித்தும் அறிய பெரிய தூண்டுகோலாக அமையும்.
மேலும், இந்த விதைத்திருவிழாவில் விவசாயிகள், விவசாயத்தின் இன்றைய பிரச்சினை, சந்திக்கும் தடைகள், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய விதைகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும், அவசியம் என்ன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த திருவிழாவில் பேசப்பட உள்ளது.
இந்த விதைத்திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்து கூறுகையில், “ உலக அளவில், நாட்டில் உள்ள அழியும் தருவாயில் இருக்கும் விதைகள், தானியங்களை மீட்டெடுக்கும் வகையில், தெரிந்து கொள்ளும் வகையில் இந்த 3 நாள் திருவிழா அமையும்.
பெரும்பாலானோருக்கு நமதுநாட்டின் பாரம்பரிய நெல், பருப்பு வகைகள் குறித்து தெரியாது. சில அரியவகை நம்நாட்டுக்கே உரித்தான சில அரியவகை தானியங்கள், நெல் வகைகள் இருக்கின்றன. இந்த திருவிழாவில் விதைப் பாதுகாவலர்கள் தங்களின் விதைகளை மக்களிடம் அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை விளக்குவார்கள்

நம்நாட்டின் பாரம்பரிய விதைகள், தானியங்களை பாதுகாப்பது அனைவரின் உரிமை. விதைகள்தான் விவசாயத்தின் உயிர்நாடி. அதை பாதுகாத்து, பெருக்கி, அடுத்து வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டும். பல்வேறு தானியங்களை, நெல்வகைகளை, விதைகள் நம்நாட்டில் பயிரிட முடியும் என்பதை இந்ததிருவிழாவில் புரிய வைப்போம்.
மேலும், நீர் சுத்திகரிப்பு மேலாண்மை, பாரம்பரிய உணவு, இயற்கை உரங்கள், குழந்தைகள் மரம் வளர்ப்பு, விதைப்பந்து செய்தல், விதைகள், மரக்கன்றுகள் வழங்குதல், இயற்கைமுறையில் துணிகளுக்கு சாயம் போடுதல், இயற்கை ஆடைகள், மாடி விவசாயம், உள்ளிட்டவைகள் குறித்து கற்றுக்கொடுக்கப்படுகிறது.
மேலும், பல்வேறுவகையான விதைகள், நெல், பருப்புகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள், ஆகியவற்றின் மாதிரிகளும், அவற்றின் விதைகளும் விற்பனை செய்யப்படஉள்ளது. நமது நாட்டின் பாரம்பரிய விவசாயம், விதைகள், தானியங்கள், நெல் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், அழியாமல் பாதுகாக்கவும் இந்த திருவிழா உதவும்” என்று தெரிவித்தார்.
