Asianet News TamilAsianet News Tamil

வரத்து அதிகரிப்பு.. பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?

மழை குறைந்து வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளின் விலை பாதியாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலை தக்காளில் ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tomato price dropped - Tomato sells for Rs.50 per kg  in Chennai
Author
Tamilnádu, First Published May 25, 2022, 11:20 AM IST

தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் பெய்து வந்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? ஜூன் மாத இறுதியில் திறப்பு.. ? அமைச்சர் இன்று அறிவிக்கிறார்..

ஏற்கனவே சமையல் எரிவாயு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களின் விலை உயர்வினால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு தக்காளி விலை பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தக்காளி விலையை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் கூட்டுறவு சங்கங்களில் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யபட்டது. அங்கு தக்காளில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் தேவையில் அடைப்படையில் நியாயவிலை கடைகளிலும் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டும் என்றும் வெளிசந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை நுகர்வோர் கடைகளில் விற்பனை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மழை குறைந்ததை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.இதனால் கிலோ தக்காளி ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை பாதியாக குறைந்து இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சில்லறை வியாபாரக்கடைகளில் ரூ.70 வரை விற்பனையாகி வருகின்றன.

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி.. இனி குறைந்த விலையில் தக்காளி.. தமிழக அரசு எடுத்த அதிரடி..

Follow Us:
Download App:
  • android
  • ios