ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார். இதையொட்டி மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பு பணம், கள்ள நோட்டு ஒழியும் என கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வைத்திருந்த மக்கள், சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு படை எடுத்தனர்.

சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனாலும், அங்கேயே போதிய அளவுக்கு சில்லறை இல்லாததால், பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது தொடர்பாக சந்தேகங்களுக்கு விளக்கம் அறிந்து கொள்ள இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி 022226 02201, 022226 02944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
