Asianet News TamilAsianet News Tamil

Tomato price :ஷாக்!! சதமடித்த தக்காளி.. விலை உயர்வு காரணம் இதுதான்..! வியாபாரிகள் கூறுவது என்ன..?

Today tomato price in Tamilnadu: ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளின் விலை தொடர்ந்து அதிகரித்து, இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தொட்டிருக்கிறது.

Today tomato price in Tamilnadu
Author
First Published May 19, 2022, 12:01 PM IST

கோயம்பேடு சந்தையில் 20வது நாளாக இன்று தக்காளின் விலை அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.அதேபோல் நாட்டு தக்காளி நேற்று ரூ. 85 க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 95-க்கும் நவீன தக்காளி நேற்று ரூ. 90 க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 100-க்கும் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் நாட்டு தக்காளி இன்று ரூ. 100 க்கும் நவீன தக்காளி இன்று ரூ.110 க்கும் விற்பனையாகிறது. 

Today tomato price in Tamilnadu

பின்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று ரூ.110 ஆக இருந்த பீன்ஸ் விலை, இன்று ரூ.120 ஆகவும் நேற்று ரூ.80 என்றிருந்த அவரைக்காய் இன்று ரூ. 90 ஆகவும் உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் பீன்ஸ் கிலோவிற்கு ரூ130 க்கும் அவரை கிலோவிற்கு ரூ.100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today tomato price in Tamilnadu

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மட்டும் கோயம்பேடு சந்தைக்கும் ஒரு நாளைக்கு 80 % தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் அசானி புயல் காரணமாக, தொடர் கனமழையினால் மேல் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தக்காளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.  இதனால் கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 80 லாரிகள் தக்காளி ஏற்றி வரும் நிலையில், தற்போது 30 ஆக குறைந்துள்ளது. 

இதன் காரணமாகவே தக்காளியின் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 950 முதல் 1,050 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் 15 முதல் 20 சதவீதம் அதிகரித்து விற்கப்படுகிறது. 

மேலும் படிக்க: அடிச்சு தூக்கும் விலை.. புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

Follow Us:
Download App:
  • android
  • ios