Asianet News TamilAsianet News Tamil

இன்று இடியுடன் கூடிய செம மழை... கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Today thunderstorm rains ... warning to coastal districts!
Today thunderstorm rains ... warning to coastal districts!
Author
First Published Nov 24, 2017, 11:05 AM IST


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. துவங்கிய நிலையில் சில நாட்கள், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக, மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவி வருகிறது. 

Today thunderstorm rains ... warning to coastal districts!

இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் என்று இந்திய வானிலை மையம் கூறியிருந்தது.   வரும் 27 ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகக் கூடும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏதும் உருவாகவில்லை.  வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை உள்ளபோதும், மழை குறைந்த நிலையிலேயே உள்ளது.

Today thunderstorm rains ... warning to coastal districts!

தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஆனாலும், தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில் சற்று மூன்று நாளாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

Today thunderstorm rains ... warning to coastal districts!

நாளை மறுநாள் அதாவது 26 ஆம் தேத முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 

Today thunderstorm rains ... warning to coastal districts!

இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி நகருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மிதமான அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios