வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரத்தை அடுத்த நாமகரிப்பேட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு நேற்று குடும்பதினருடன் இல்ல நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீ்ட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இன்று காலை வீட்டிற்கு வந்த திருநாவுக்கரசு கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதையடுத்து அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவிவுடன் தடையங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.   

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைக் கொள்ளை!

சென்னை ராயப்பேட்டையில் கணினி மென்பொறியாளர் கார்த்திக் என்பவர் வீட்டில் 30 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரத்தையும் கொள்ளையடித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு!

பெங்களூரு ஹென்னூரைச் சேர்ந்தவர் பத்மினி. இவர் அதே பகுதியில் சனீஸ்வரன் கோயில் அருகே பஸ்க்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக இளைஞர்கள் 2 பேர் பைக்கில் வந்துள்ளனர். பத்மினி அவர்களை கவனிக்காமல் நின்றிருந்தபோது அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பத்மினி கூச்சலிட்டு அழுதார். ஆனால், சங்கிலியை பறித்தவர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் மறைந்தனர். இது தொடர்பாக ஹென்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பறித்துச் சென்ற தங்கச் சங்கிலியின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.