Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rain : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…?

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

 

Today rain in the Western Ghats and southern districts
Author
Tamilnadu, First Published Dec 7, 2021, 2:04 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது  மெல்ல மெல்ல மழையானது குறைந்து வருகிறது. இன்று மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (புதன் கிழமை) கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Today rain in the Western Ghats and southern districts

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை மறுநாளான டிசம்பர் 9 (வியாழக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

Today rain in the Western Ghats and southern districts

ஏனைய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும்,  10 மற்றும் 11ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios