சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99 டாலர் என்ற அளவில் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு :

ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. உக்ரைன் ரஷ்யா போரும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி இருந்தது. 

இனிமேல் விலை குறையுமா ? :

அதற்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையும் நாடு முழுக்க குறைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து முடிவுகள் வரும்வரை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 99 டாலர் என்ற அளவில் குறைந்தும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை :

சென்னையை பொறுத்தவரை பெட்ரோல்,டீசலின் நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று சென்னையில் 4-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.