Asianet News TamilAsianet News Tamil

Corona TN:சென்னையில் குறையும் கொரோனா..இன்று ஒரே நாளில் 30,744 பேர் பாதிப்பு..

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 

Today corona case report
Author
Tamilnádu, First Published Jan 22, 2022, 7:59 PM IST

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,744பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 29,870 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 874 அதிகரித்து 30,744 ஆக பதிவாகியுள்ளது. 1,55,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,744 ஆக உள்ளது. 

ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 30,744 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 7,038 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் கொரோனா எண்ணிக்கை 6452 ஆக குறைந்துள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 682 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 6452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 30,718 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 26 பேர் என 30,744 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 33 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,178 ஆக உள்ளது. அரசு மருத்துவமனையில் 18 பேரும் தனியார் மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 1,94,697ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 1,87,358ல் இருந்து 1,94,697 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 23,372 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 28,71,535ஆக அதிகரித்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,653  ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 3,886 ஆக அதிகரித்துள்ளது. அதே போல் செங்கல்பட்டில்2,250ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 2,377 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 1,016 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது ஆக 1,069 அதிகரித்துள்ளது.

திருப்பூரில் 958 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1014 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் 973 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,066 ஆக அதிகரித்துள்ளது. கன்னியாகுமரியில் 1,248 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,266 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் 903 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 565 ஆக குறைந்துள்ளது. தஞ்சையில் 684 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 840 ஆக அதிகரித்துள்ளது. 

நெல்லையில் 754 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 828 ஆக அதிகரித்துள்ளது.  சேலத்தில்1009 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 1,080 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் 635 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 700 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் 748 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 878 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் திருச்சி 705, கடலூர் 587, தி.மலை 592, விருதுநகர் 529, நாமக்கல் 704 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios