இராயக்கோட்டையில் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் சினம் கொண்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். பின்னர், மறியல் செய்த 32 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

இராயக்கோட்டை அருகே சானமாவு, பீர்ஜேப்பள்ளி, உத்தனப்பள்ளி, ஐயர்னப்பள்ளி, துப்புகானப்பள்ளி, கொம்மேபள்ளி, நாகமங்கலம், மெட்டரை ஆகிய பகுதிகளில் உள்ளன. இங்குள்ள ஏரிகளில், கெலவரப்பள்ளி அணை தண்ணீரை நிரப்ப வேண்டும்.

இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உப்பரதம்மண்டரப்பள்ளி, உத்தனப்பள்ளி மாநில நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்கக் கூடாது” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உத்தனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் அழகேசன் தலைமை வகித்தார்.

பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் வராததால், சினம் கொண்ட போராட்டக்காரர்கள் இராயக்கோட்டை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நிகழ்விடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி காவலாளர்கள், அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், மக்கள் என 32 பேரை கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் அனைவரையும் அருகிலுள்ள ஒரு சமுதாய கூடத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.

போராட்டக்காரர்களின் சாலை மறியலால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.