கோயம்புத்தூர்

நொய்யலின் தடுப்பணைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கோவையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இருசக்கர வாகனப் பேரணியை நடத்தினர்.

கோயம்புத்தூர் மாவட்ட குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இருசக்கர வாகனப் பேரணி ஒன்றை கோவையில் நடத்தினர்.

இப்பேரணியானது நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடியில் தொடங்கி கோயம்புத்தூர் தடுப்பணையில் நிறைவடைந்தது.

பின்னர், குனியமுத்தூர் தடுப்பணை, குறிச்சி வரை உள்ள மூன்று தடுப்பணைகளையும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பார்வையிட்டனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் கூறியது:

“கோயம்புத்தூரில் பெருமையான நொய்யலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் அதன் தடுப்பணைகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், நீராதாரங்களையும், தடுப்பணைகளையும் பாதுகாக்க அறிவியல் பூர்வமான திட்டங்களை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு நொய்யலைப் பாதுகாக்க வலியுறுத்தினர்.