தமிழக அரசால் நியமிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமன உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி ராமமூர்த்தி, பிரதாப்குமார்,சுப்பையா,மாடசாமி,கிருஷ்ணசாமி,புண்ணியமூர்த்தி,

ராஜாராம்,முத்துராஜ்,பாலுச்சாமி, சுப்ரமணியன், சேதுராமன் ஆகிய 11 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11பேரும் அதிமுக வை சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் ஒரு சார்பில் செயல்படுபவர்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் விதிகளை பின்பற்றாமல் 11 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த மனுவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல்,மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதனையடுத்து இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது,

அதில் விதிமுறைகளை மீறி 11 பேரும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கபட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த 11 பேரின் நியமன உத்தரைவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.