TNPSC Group 4: குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 7 ஆயிரத்து 382 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர்,தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 7 ஆயிரத்து 382 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிபணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது.
அதன் படி, தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வானது ஜூலை 24 ஆம் நடைபெறுகிறது. அதன் படி மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன் படி, தேர்வர்கள் அனைவரும் இணைய வழியாக விண்ணப்பித்து வந்தனர். இதுவரை 17.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும்.7,382 பணியிடங்களுக்கு நடக்கவுள்ள குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.குரூப் 4 தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் கடைசி நாளான இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
