Asianet News TamilAsianet News Tamil

TNagriBudget 2022:தேனி, கோவை, நாகர்கோவிலுக்கு புதிய திட்டம்: தக்காளி சாகுபடிக்கு முக்கியத்துவம்

TNagriBudget 2022:தேனி, கோவை, நாகர்கோவில் நகரங்களில் காய்கறி மொத்த விற்பனை வளாகம் உருவாக்கப்படும். தேன் வளர்ப்புக்கு ஊக்கமும், மானியமும் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார்

TNagriBudget 2022:New project for Theni, Coimbatore, Nagercoil
Author
Chennai, First Published Mar 19, 2022, 11:03 AM IST | Last Updated Mar 19, 2022, 11:03 AM IST

தேனி, கோவை, நாகர்கோவில் நகரங்களில் காய்கறி மொத்த விற்பனை வளாகம் உருவாக்கப்படும். தேன் வளர்ப்புக்கு ஊக்கமும், மானியமும் வழங்கப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்தார்

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு கடந்த ஆண்டு முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. அது இடைக்காலபட்ஜெட்டாக இருந்தது. திமுக அரசு தனது 2-வது மற்றும் முழுமையான  வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது.
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:

TNagriBudget 2022:New project for Theni, Coimbatore, Nagercoil

  • வேளாண் பட்ஜெட்டுக்கு ரூ.33007 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.32 ஆயிரத்து 775 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் அதைவிட கூடுதலாக 230 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
  • காய்கறி உற்பத்தியை ஊக்குவிக்கவும், பெருக்கவும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கப்படும். இதற்காக தேனி, நாகர்கோவில், கோவையில் காய்கறிமொத்த விற்பனை வளாகம் திறக்கப்படும்.
  • தக்காளி விலையைக் கட்டுப்படுத்த, ஆண்டுமுழுவதும் தக்காளி விளைச்சல், உற்பத்தி சீராக நடக்கும் வகையில் தக்காளி சாகுபடிக்கு ஊக்கம்அளிக்கப்படும் இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கப்படும்.
  • கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ195 வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும்; கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2950 வழங்கப்படும்
  • கரும்பு சாகுபடிக்கு உதவியாக ரூ.10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம்
  • நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதால், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும்
  • சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்
  • ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த ரூ.65 கோடி ஒதுக்கீடு
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ.5 ஆயிரத்து 157 கோடி நிதி ஒதுக்கீடு

TNagriBudget 2022:New project for Theni, Coimbatore, Nagercoil

இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios