தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்… ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. அங்கு எல்லையில் ஊடுருவி ராணுவ முகாமிற்குள் திடீரென புகுந்த 2 பயங்கரவாதிகள், முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், பதிலுக்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு செல்லுமா.? செல்லாதா.? நீதிமன்றத்தில் காரசார விவாதம்..! தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி
இதேபோல் அந்த இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு ராணுவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உயிரிழந்த மூன்று இந்திய வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவர், மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் என்பதும் தெரியவந்தது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆவினில் அருமையான வேலை.. ரூ.43,000 வரை சம்பளம்.. நாளை தான் கடைசி.. முழு விவரம்..
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும், வீரவணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன். வீரமரணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.