Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்... வெளியிட்டது தமிழக அரசு!!

ஜல்லிக்கட்டுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

tn govt released standard guidelines for jallikattu competition
Author
First Published Jan 6, 2023, 7:18 PM IST

ஜல்லிக்கட்டுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்குவதை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். மாடுகளும் மாடுபிடி வீரர்களும் தயாராகி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆன்லைன் ஆப் மூலம் கடன் மோசடி; 5 பேர் கைது, 500 சிம் கார்டுகள் பறிமுதல்

ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது, காளைகளுடன் அனுமதிக்கப்படும் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கூடாது.

இதையும் படிங்க: துணி காய வைக்க சென்ற பெண்.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை, அரங்கில் 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதி அளவு மட்டுமே அனுமதிக்கப்படுவர், காளையர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், போட்டிக்கு 2 நாளுக்கு முன் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios