முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு வழங்கப்படும் ரூ.1.50 லட்சமாக  இருந்தது. 

தற்போது, 1.50 ரூபாயிலிருந்து,  ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தை மேம்படுத்திடும் வகையில் மேலும் 312 சிகிச்சை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.