Asianet News TamilAsianet News Tamil

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இழப்பீடு தொகை உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு.. முழு விவரம்

அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

TN Govt order to Increase family planning compensation Amount - New Announcement
Author
Tamil Nadu, First Published Jul 16, 2022, 5:05 PM IST

அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திற்கு வழங்க கூடிய இழப்பீடு 2 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சமாக உயர்த்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் குடும்ப கட்டுப்பாடு தவறும்பட்சத்தில் அதற்கு இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மருத்துவ கண்காணிப்பில் ஓ.பி.எஸ்.. உடல்நிலை தற்போது எப்படி இருக்கு..? வெளியான மருத்துவமனை அறிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், கடந்த 2016 ஆம் ஆண்டு எனக்கு பாலாஜி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாடி அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். ஆனால் குடும்பக் கட்டுப்பாடு செய்த பின்பு, நான் கர்ப்பமானேன். அதனால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பாடி மருத்துவமனை தரப்பிடம் சென்று கேட்டதில், அங்கு உரிய பதில் தரப்படவில்லை. மேலும் எனது கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்ற போது, அது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை தவறும்பட்சத்தில் அதற்கான இழப்பீடாக 30 ஆயிரம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினார். இதனால் வேறு வழியின்றி 3 வது குழந்தை பெற்றுக் கொண்டேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:அச்சமூட்டும் குரங்கு அம்மை.. தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

எனவே எனக்கு குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்ததால் ரூ.50 லட்சம் இழப்பீடாக தர உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார், இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட மருத்துவ துறை அதிகாரி உள்ளிட்டவருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருந்தார். மீண்டும் இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது இதேபோல ஏற்கனவே நடந்த சம்பவம் ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் சுமார் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மனுதாரர் கூலித் தொழிலாளி என்றும் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

மேலும் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் , "குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திகு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக் உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையான 30 ஆயிரம் ரூபாயை 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அரசாணையை தாக்கல் செய்தார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எம். தண்டபாணி வழக்கை முடித்து வைத்து, மனுதாரருக்கு வேறு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் தனியாக வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios