Asianet News TamilAsianet News Tamil

பருவநிலை மாற்றத்தை கையாள சுவிட்சர்லாந்துடன் ஒப்பந்தம்… தமிழக அரசின் புதிய வியூகம்!!

பருவநிலை மாற்றம் குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் ஐ.சி.எல்.இ.ஐ நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் மாசுபாட்டை எவ்வாறாக தவிர்ப்பது, அதற்கான ஆலோசனைகளை தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்குவது, ஒட்டுமொத்தமாக பருவநிலை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு தேவையான அனைத்துவிதமான தேவைகள் மற்றும் உதவிகளை அந்த நிறுவனம் செய்யும் என்று கூறப்படுகிறது.

tn Govt Memorandum of understanding with Swiss
Author
Chennai, First Published Nov 2, 2021, 1:39 PM IST

அண்மையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சுவிட்சர்லாந்து தூதர் ரால்ப் ஹெக்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பருவநிலை மாற்றத்தால் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. வெப்பமயமாதல் அதீத கனமழை உள்ளிட்டவை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன்பின்னர் ஐசிஎல்இஐ என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த நிறுவனத்துடன், தமிழக அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, மாசுபாட்டை எவ்வாறாக தவிர்ப்பது, அதற்கான ஆலோசனைகளை தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்குவது, ஒட்டுமொத்தமாக பருவநிலை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு தேவையான அனைத்துவிதமான தேவைகள் மற்றும் உதவிகளை இந்த நிறுவனம் ஒப்பந்தத்தின்படி செய்யும். மேலும் சர்வதேச நாடுகளுடன், தொடர்பிலிருந்து தேவையான உதவிகளை தமிழகத்திற்கும் அரசுக்கும் இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது. ஏற்கெனவே தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்காக திட்டத்தை மிகத் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது.

tn Govt Memorandum of understanding with Swiss

முன்னதாக பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. அதை அடுத்து காய்கறி, பலசரக்கு போன்ற பெரும்பாலான கடைகளுக்கு வருவோர் மஞ்சப்பை, துணிப்பைகள் மற்றும் கூடைகளை எடுத்து வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். ஆனாலும் சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சாலையோரம் பூ வியாபாரம் மற்றும் பழ வியாபாரத்தில் ஈடுபடுவோர் வழக்கம்போலவே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். மக்களது அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிதும் கையாளப்பட்டு வருகின்றன. மக்களிடம் இருந்து பிளாஸ்டிக்கை பிரிக்கவே முடியாது என்ற சூழ்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  சாலையோர உணவகங்கள் மற்றும் ஏராளமான ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த பிளாஸ்டிக் தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து பாலிதீன் பைகளை தவிர்த்துவிட்டு அதற்கு மாற்றாக பேப்பர் பைகள் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மிக தீவிரமாக கொண்டு வர இருக்கிறது. இதற்காக மஞ்சள் பை திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்த இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios