Asianet News TamilAsianet News Tamil

அம்மா ஸ்கூட்டர் வாங்க... என்னென்ன தகுதிகள்? யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?

TN GOVT decision to launch Amma two-wheeler scheme for women
TN GOVT decision to launch Amma two-wheeler scheme for women
Author
First Published Jan 22, 2018, 8:00 AM IST


புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வரும் ஆண்டுக்கான செயல்திட்டங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.  'பெண்களுக்கு இருசக்கர வாகனம் மானியம் வழங்கும் திட்டத்தின்' கீழ், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உதவித்தொகையின் உச்சவரம்பு, ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை. வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனம் பெற விண்ணப்பிக்கும் தகுதியுள்ள பெண்கள் யார் என்பது குறித்து அரசு வெளியிட்டுள்ளது:

இந்த அறிவிப்பில்; கியர் இல்லாத அல்லது தானியங்கி கியருடன் கூடிய 125.சிசி எந்திரத் திறன் கொண்ட புதிய இரு சக்கர வாகனங்களுக்கு வாகன விலையில் ரூ.25000/- அல்லது 50% வாகன விலை இதனில் குறைவான தொகை பயனாளிக்கு அரசினால் வழங்கப்படும்.. இரு சக்கர வாகனம் 01.01.2018க்குப் பின்னர் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்..

யார் யாருக்கு கிடைக்கும்?

நிறுவனப் பணியிலுள்ள மற்றும் முறைசாரா பணியிலுள்ள பெண்கள். கடைகள் மற்றும் இதர நிறுவனங்களிலுள்ள பெண்கள்.

அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள்.

பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண் வங்கி வழி நடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள்..

TN GOVT decision to launch Amma two-wheeler scheme for women

என்னென்ன தகுதிகள்?

தமிழ்நாட்டை சார்ந்த 18 முதல் 40 வயது வரையுள்ள இருசக்கர வாகன உரிமம் பெற்றுள்ள பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத தொழிற்பிரிவுகளில் பணியாளராக பதிவு செய்தவர்கள், சுயதொழில் புரிவோர், சொந்தமாக சிறுவணிகம் செய்வோர், கடைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணி புரியும் மகளிர். வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆஷா பணியாளர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு 40 மிகாமல் இருக்க வேண்டும். ஆதரவற்ற பெண்கள், இளம் விதவைகள், மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மகளிர், திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மனுக்கள் பெறும் தேதி ஜனவரி 22, 2018 முதல் பிப்ரவரி 05, 2018 வரை ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கல்  கிடைக்கும்.

TN GOVT decision to launch Amma two-wheeler scheme for women

பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் பிப்ரவரி 5, 2018 வரை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளப்படும். 

வங்கியில் கடன் கிடைக்குமா?

பயனாளிகள் தங்களுக்கு விருப்பமுள்ள 125.சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தினை சொந்த நிதியிலிருந்து அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வசதி பெற்றும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios