Asianet News TamilAsianet News Tamil

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்டவர்களின் விவரம் வேண்டும்... தமிழக அரசு உத்தரவு!!

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனரா? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து சமர்பிக்க அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

tn govt asks detailed report about cps to ops conversion
Author
First Published Feb 28, 2023, 9:02 PM IST

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனரா? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து சமர்பிக்க அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. ஆனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தாராபுரம் இன்ஸ்பெக்டர் மாயம்.. குடும்ப பிரச்னையா? சமூக வலைத்தளங்களில் வைரல் ஆடியோ கிளப்பிய சர்ச்சை.!

இந்த நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனரா? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து சமர்பிக்க அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்து அனைத்து துறை செயலாளர்களுக்கும் அவர் எழுதிய கடிதத்தில், 2003 ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனரா?

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் 60 ஆயிரம் சம்பளத்துடன் அரசு வேலை!

tn govt asks detailed report about cps to ops conversion

அவ்வாறாக மாற்றப்பட்டிருந்தால் ஏதன் அடிப்படையில் மாற்றப்பட்டனர்? யாருடைய உத்தரவின் பேரில் மாற்றப்பட்டனர்? எந்தெந்த துறைகளில் எல்லாம் மாற்றப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான முழுமையான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது நிதித்துறை செயலாளர் அதுக்குறித்த விவரங்களை கேட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios