எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீதம் விடுவித்திருந்த நிலையில் மீதமுள்ள 50 சதவீதமும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.352 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீதம் விடுவித்திருந்த நிலையில் மீதமுள்ள 50 சதவீதமும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏக்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். இந்த நிலையில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இதுக்குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்திற்குள் விடுவிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தும் திமுக அரசு இதுவரை விடுவிக்காமல் இருப்பது, இந்த அரசின் தீய எண்ணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இத்தகைய செயல்களின் மூலம், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும், ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் வெற்றி பெற, திமுக அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, இனியும் தாமதம் செய்யாமல் 2021-2022 ஆம் ஆண்டுக்குரிய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை அடுத்து எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்காக 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-2022 ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதத்தை தமிழக அரசு விடுவித்தது. இந்த நிலையில் ஏற்கனவே மீதமுள்ள 50 சதவீத தொகையும் தமிழக அரசு விடுவித்துள்ளது.

அதன்படி, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.352 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ரூ.352 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவிகிதத்தை ஏற்கனவே விடுவித்த நிலையில் தற்போது மீதமுள்ள 50 சதவிகித்தத்தையும் தமிழக அரசு விடுவித்துள்ளது.
