கடந்த 1 மாத்தில் மட்டும் 30 பேர் பட்டாசு விபத்தில் பலி; அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கடந்த 1 மாத்தில் மட்டும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோர் பட்டாசு விபத்தில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி வேதனை அளிக்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
நாமக்கல்லில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய நபர்
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே இது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதற்கான காரணம் என கூறப்படுகிறது.
ஆபத்தை உணராமல் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டாசு விபத்தில் இதுவரை 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு அனைத்து பட்டாசு ஆலைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதோடு, பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.