தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று 1500க்கும் கீழாக பதிவாகி இருக்கிறது.

சென்னை: தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்று 1500க்கும் கீழாக பதிவாகி இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:

1,46,735 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 1449 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 26,71,411 ஆக உள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட 1499 பேரில் 849 பேர் ஆண்கள், 600 பேர் பெண்கள். 1548 பேர் கொரோனாவில் இருந்து இன்று குணமாகி விட்டனர். 16 பேர் இன்று கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 35,682 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.