Asianet News TamilAsianet News Tamil

மயானங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்!

மயானங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்

TN Chief secretary iraianbu ias letter to district collectors to create green burial grounds
Author
First Published Jun 22, 2023, 11:24 AM IST

 மாயனங்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், பசுமை மயானங்களை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து அனைத்து ஆட்சியர்களுக்கும் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “ஏற்கனவே உயிரிழந்த மக்களை சிரமத்திற்கு ஆளாக்காத வகையில், தூய்மையாகவும், நேர்த்தியாகவும், புதைகுழிகள் மற்றும் சுடுகாடுகளை அமைக்க அரசு ஆர்வமாக உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பல இடங்களில் உள்ள மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப்படாமல், அடிப்படை வசதிகள் கூட இல்லை. குறிப்பாக, அதிக இறப்புகள் நடைபெறும் நகர்புறங்களில் மயானங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. 

சனாதனத்தை எதிர்த்தவர் வள்ளலார்: ஆளுநர் ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடுகாடு மற்றும் சுடுகாடுகளுக்கு வரக்கூடிய பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள். தண்ணீர், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அமர்வதற்கு தேவையான கொட்டகைகள், பூக்கள் பூக்கும் செடிகள் மற்றும் மரங்களை நட்டு பசுமை மயானங்களை உருவாக்கிடுங்கள்.

TN Chief secretary iraianbu ias letter to district collectors to create green burial grounds

மயானங்களில் சுற்றுப்புறச் சுவர்களை கட்டுவதன் மூலம் பசுமை மயானங்களை உருவாக்க முடியும். நீங்கள் உங்கள் மாவட்டத்தில் அமைக்கும் தூய்மையான மயானங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். இந்த வசதிகளை வழங்க உங்கள் பகுதியில் உள்ள சேவை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் துறையின் சேவையையும் நீங்கள் பயன்படுத்தலாம். மயானங்களின் ஒட்டுமொத்த சூழலை மேம்படுத்துவது, இறந்த ஆத்மாக்களுடன் வரும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

சுத்தமான பசுமை மயானங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டையும் மேம்படுத்த இது உதவும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios