Asianet News TamilAsianet News Tamil

TN budget 2022: விவசாயிகளுக்கு பரிசு; வேளாண் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு கடனுதவி

TN budget 2022:காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய பயிர்களை பயிரிட விவசாயிகளை அரசு  ஊக்குவிக்கும். கடந்த ஆண்டு வெளியிட்ட 86அறிவிப்புகளில் 80அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

TN budget 2022:Loans to youth who have completed agricultural studies
Author
Chennai, First Published Mar 19, 2022, 10:38 AM IST

காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய பயிர்களை பயிரிட விவசாயிகளை அரசு  ஊக்குவிக்கும். கடந்த ஆண்டு வெளியிட்ட 86அறிவிப்புகளில் 80அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

TN budget 2022:Loans to youth who have completed agricultural studies

தமிழக அரசின் 2-வது வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:

  1. காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களைப் பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். தமிழக அரசு கடந்த ஆண்டு எடுத்த நடவடிக்கையால், வேளாண் நிலங்கள் அளவு அதிகரித்துள்ளது.
  2. 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமும், பயி்ற்சியும் வழங்கப்படும். 
  3. வேளாண் காப்பீடு திட்டத்துக்காக தமிழக அரசு சார்பில் ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 
  4. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்காக முதல்கட்டமாக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 
  5. விதை மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், விவசாயிகளுக்கு 30ஆயிரம் மெட்ரின் டன் விதைகள் வழங்கப்படும்.
  6. நெல் ஜெயராமன் பெயரி்ல் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள் உருவாக்கப்பட்டு, 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
  7. வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்கள் சுய தொழில் செய்ய ரூ.ஒரு லட்சம் கடன் வழங்கப்படும்.
  8. மரம் வளர்பப்தற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  9.  வேளாண் துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் பரிசு வழங்கப்படும். 
  10. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும். சிறுதானிய உற்பத்தி மட்டுமல்லாமல், அதை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றவும் தேவையான உதவிகள் செய்யப்படும். மாவட்டம், மாநில அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்

இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios