தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 27 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மிகுந்து எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் வரக்கூடிய 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்தி வந்தன.
இந்த நிலையில் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்க இருந்த முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.


