TN agri Budget 2022: மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்து, 3 லட்சத்துக்கும் அதிகமான டெல்டா விவசாயிகள் வருமானமும், வாழ்தாரமும் உயர்ந்திடச்செய்தது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேளாண்அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார்
மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்து, 3 லட்சத்துக்கும் அதிகமான டெல்டா விவசாயிகள் வருமானமும், வாழ்தாரமும் உயர்ந்திடச்செய்தது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேளாண்அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார்
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு கடந்த ஆண்டு முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. அது இடைக்காலபட்ஜெட்டாக இருந்தது. திமுக அரசு தனது 2-வது மற்றும் முழுமையான வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது.
வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:
80 திட்டங்களுக்கு அரசாணை
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் தவழ்கின்ற குழந்தையாய் நமது காதுகளில் ஒலித்தது, இந்த ஆண்டு நடக்கிற குழந்தையாய் பட்ஜெட் குளிர்விக்க இருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் ஓடுகின்ற குழந்தையாய் நம்மை மகிழ்விக்க இருக்கிறது.
கடந்த ஆண்டு 86 அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட்டதில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டது.6 திட்டங்கள் நீண்டகாலத் திட்டங்கள் என்பதால், அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று சாதனை
கடந்த ஆண்டு மேட்டூர் அணையை ஜூன் மாதம் 12ம் தேதி குறித்த நேரத்தில் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுத்தார். ரூ.61கோடியே 9 லட்சத்தில் குறுவை சாகுபடிதொகுப்புத் திட்டத்தை முதல்வர் வெளியிட்டார்.4.90 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்ததால், 3.16 லட்சம் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமும்,வருமானமும் உயர முதல்வர் வழிவகுத்துள்ளார். இது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையாகும்.
சாகுபடி பரப்பு அதிகம்
பருமழையை திறமையாகப் பயன்படுத்தும் வகையில் ஏரிகள், குளங்கள், குட்டைகள், வாய்கால்களை தூர்வாரும் பணிகளை துரிதமாகச் செய்ததால், 2022, பிப்ரவரி 14ம் தேதிவரை,தமிழகத்தில் நெல்சாகுபடி பரப்பு 53.50 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.86 லட்சம் ஏக்கர் அதிகமாகும்.

நெல் ஜெயராமன் பாதுகாப்புஇயக்கத்தின் வாயிலாக, பாரம்பரிய நெல் ரகங்கள் ரகங்கள் அரசு விதைப்பண்ணைகளில் 200ஏக்கரில் பயிரிடப்பட்டு இதுவரை 59 மெட்ரிக் டன் விதைநெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் 29 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால், காலநிலை மாற்றத்தை தாங்கி வளரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்ய ஊக்கம் அளிக்கப்படும். அதிகமான நீர் தேவையுள்ள பயிர்களைக் குறைத்து குறைந்த நீர்தேவையுள்ள சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிடுவது ஊக்கப்படுத்தப்படும்.

2022-23ம்ஆண்டில் தமிழகத்தில் 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தியை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்
