திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுத் அதன்  சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக  தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது, இதையடுத்து , திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோவை , நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருப்பூரிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலும்  கடந்த திங்கட்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்பணைகள், குளங்கள், குட்டைகளுக்கு தண்ணீர் சென்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.