பயணிகளின் கனிவான கவனத்திற்கு; விழுப்புரம் - திருப்பதி இடையே ரயில் சேவையில் மாற்றம்
ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம், திருப்பதி இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதன் காரணமாக விழுப்பும் - திருப்பதி இடையேயான முன்பதிவு இல்லாத விரைவு ரயில் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் காட்பாடி - திருப்பதி இடையே இன்று முதல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுபத்தப்படும்.
மாணவிகளை மிரட்டி இச்சைகளை தீர்த்துக்கொண்ட ஆசிரியர்கள்; போலீசார் அதிரடி
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மறு மார்க்கத்தில் திருப்பத்தியில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் திருப்பதி - காட்பாடி இடையே இன்று முதல் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி - காட்பாடி, காட்பாடி - திருப்பதி பயணிகள் ரயில் மற்றும் காட்பாடி - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - காட்பாடி விரைவு ரயில் சிறப்பு ரயில்களின் சேவையும் வருகின்ற 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.