திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் நலம் விசாரித்தனர். கருணாநிதி நலமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கடந்த முறை நான் திருப்பதி சென்ற போது அணைகள் அனைத்தும் நிரம்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். நான் பிரார்த்தனை செய்தது போன்று மேட்டூர் உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன என முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 

காவிரியின் பாதை சமவெளியாக இருப்பதால் அணை கட்ட முடியாது, அப்படியே கட்டினால் நீர் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். நீரை தேக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும் என தெரிவித்தார். 8 வழிச்சாலை திட்டத்தால் சேலம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன்பெறுவர். 

8 வழிச்சாலை திட்டத்திற்காக 95% நில அளவைப் பணிகள் முடிந்துவிட்டன என முதல்வர் தெரிவித்துள்ளார். எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் ஒரு சிலர் எதிர்க்கதான் செய்வார்கள் என்று கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நானும் இணைந்து செயல்படுகிறோம்.

எந்த தேர்தலையும் சந்திக்க அதிமுக, எப்போதும் தயாராக உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சொத்து வரி உயர்த்தப்பட்டது என்றார்.