'வடகிழக்கு பருவமழை தீவரமாக உள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிந்து விட்ட நிலையில், தட்ப வெப்பநிலை மாற்றத்தால், வடகிழக்கு பருவமழை துவங்குவது இழுபறியாக இருந்தது. மேலும், வங்க கடலில் உருவான, 'கியான்ட்' புயலும், வடகிழக்கில் இருந்து காற்று வீச துவங்கியதால் வலுவிழந்தது. ஆனாலும் காற்றழுத்த தாழ்வாக மாறி, ஆந்திரா அருகே, வங்க கடலில் நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில், 'வடகிழக்கு பருவமழை இன்றைய நிலவரப்படி, தீவரமாக வரும் என எதிர் பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
அதேநேரத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தென் மாநில பகுதியில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான, சாதகமான சூழல் நிலவுகிறது. வங்க கடலில் ஆந்திரா அருகே நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது. வங்க கடலில் தென் கிழக்கு பகுதியிலும், புதிய காற்றழுத்த பகுதி உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.எனவே, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில், வடகிழக்கு பருவமழை, இன்று துவங்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.