இராமநாதபுரம்

இராமநாதபுரத்திலுள்ள மல்லனூர் ஆற்றுப்பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஓட்டிவந்த ஜே.சி.பி., டிராக்டர், லாரியை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

ramanathapuram district க்கான பட முடிவு

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தேளூரில் உள்ளது மல்லனூர். இங்குள்ள  ஆற்றுப்பகுதியில் அரசிடம் அனுமதி இல்லாமல் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று வி.ஏ.ஓ முனீசுவர மூர்த்தி காவல்துறைக்கு புகார் கொடுத்தார்.

அதன்படி, திருவாடனை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்படி, மணல் திருட்டில் ஈடுபடுவோரைப் பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. தனிப்படை காவலாளர்கள் திருவாடனையில் பல பகுதிகளில் அதிரடியாக சோதனையாக மேற்கொண்டனர்.

sand theft ramanathapuram க்கான பட முடிவு

அப்போது, தேளூரில் மணல் ஏற்றி வந்த டிராக்டர்களை மடக்கினர் தனிப்படை காவலளர்கள். டிராக்டர் ஓட்டுநரிடம் மணல் அள்ளுவதற்கான எந்த அனுமதியும் இல்லை என்பது அவர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது. 
  
இதனைத் தொடர்ந்து ஒரு ஜே.சி.பி. இயந்திரம், ஒரு டிராக்டர் மற்றும் ஒரு லாரி போன்றவற்றை தனிப்படை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றை தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

sand theft க்கான பட முடிவு

அனுமதியின்றி மணல் அள்ளிவந்த பிரசாத், பாண்டி, ராமு ஆகிய மூவர் மீதும் தொண்டி காவலளர்கள் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், தப்பித்து ஓடிய உடையார், மணிமுத்து, மகாலிங்கம், நாகேந்திரன் ஆகிய நால்வரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.