Asianet News TamilAsianet News Tamil

"ஆருரா !! தியாகேசா !!" திருவாரூர் ஆழித்தேரோட்டம்.. பக்தர்கள் உற்சாகம் !!

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்தனர். 

 

Thousands of devotees pulled the toad in the floodplain of the Thiruvarur Thiyagaraja Temple
Author
Tamilnadu, First Published Mar 15, 2022, 11:04 AM IST

திருவாரூர் தேர் :

 திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள். சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகார தலமாக உள்ள திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித்தேர் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. ஆழித்தேரோட்ட திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம்.

பஞ்ச பூதங்களுக்கு உரிய கோவில்களில் பூமிக்குரிய கோவிலாகும். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. அலங்கரிக்கப்படாத இந்த தேரின் பீடத்தின் உயரம் 36 அடி, அகலம் 36 அடி ஆகும். 

Thousands of devotees pulled the toad in the floodplain of the Thiruvarur Thiyagaraja Temple

அதன்மேல் தேர் அலங்கர்க்கப்படும். தேரின் விமான பகுதி வரை தேர் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி என மொத்தம் 96 அடி உயரத்துடன் ஆழித்தேர் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும்.  திருவாரூர் ஆழித்தேர் இதர கோவில்களின் தேர்களில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது. 24½ அடி நீளம், 1½ அடி உயரம் கொண்ட 2 இரும்பு அச்சுக்கள், 9 அடி விட்டமும், 1½ அடி அகலமும் உடைய 4 இரும்பு சக்கரங்கள் என தேரின் பிரம்மாண்டம் வியக்க வைக்கிறது. 

இந்த சக்கரங்களை பெல் நிறுவனம் தயாரித்துள்ளது. 4 இரும்பு சக்கரங்களையும் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் தேரில் பொருத்தப்பட்டுள்ளது.  தேரின் மேல் ஆயக்கலைகள் 64யும் விளக்கும் சிற்பங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இராமாயன மற்றும் மகாபாரத கதை சம்பங்கள் என மரச் சிற்பங்கள் ஏராளமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. 

Thousands of devotees pulled the toad in the floodplain of the Thiruvarur Thiyagaraja Temple

மரத்தேரின் எடை 220 டன். இதன் மீது பனஞ்சப்பைகள் 5 டன், மூங்கில் 50 டன், சவுக்கு 10 டன், கயிறு ஒரு டன், துணிகள் ½ டன், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட நிலையில் தேரின் மொத்த எடை 300 டன்னாகும். தேரை இழுக்க சுமார் 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் மற்றும் 4 டன் எடை கொண்ட கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

பக்தர்கள் உற்சாகம் :

ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம். திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர்.  முன்னதாக அதிகாலையில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. 

Thousands of devotees pulled the toad in the floodplain of the Thiruvarur Thiyagaraja Temple

ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் அரசின் இதர துறையினரும் இணைந்து செய்துள்ளனர். பிரசிதிப்பெற்ற இத்தேரோட்டத்தால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios