ஆருத்ரா நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் பாஜக அலுவலகம் முற்றுகை.! அண்ணாமலை தான் எங்களது பணத்தை மீட்டுத் தரனும்

ஆருத்ரா கோல்ட் நிறுவன முறைகேட்டில் பாஜக நிர்வாகிகளுக்கு தொடர் இருப்பதாக கூறி அவர்களிடம் இருந்து  பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரி பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Those who lost money in Aarudhra company besieged BJP office

ஆருத்ரா கோல்டு பண மோசடி

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் 28 இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி சுமார் ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்திருந்தனர். ஆனால் ஆருத்ரா கோல்ட் நிறுவனம்  சொன்னபடி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது.

Those who lost money in Aarudhra company besieged BJP office

பல ஆயிரம் கோடி மோசடி

இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஸ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்துள்ளார்.மாநில அளவில் பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற  பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆரூத்ரா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை தியாகராயநகரில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை  முற்றுகையிட முயன்றனர்.

Those who lost money in Aarudhra company besieged BJP office

1லட்சத்திற்கு மாதம் 30 ஆயிரம்

இதனை தொடர்ந்து பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கிராமத்தில் இருந்து வருகிறோம். எங்கள் கிராமத்தில்  ஏராளமானோர் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளோம். ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் மாதம், மாதம் தருவதாக தெரிவித்தார்கள்.இதை நம்பி சொத்துகளை வித்தும், நகைகளை அடகு வைத்தும் எங்க கிராமத்தில் மட்டும்  2 கோடியே 58 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளோம். ஆனால் அந்த நிறுவனம் சொன்னது போல் பணத்தை கொடுக்கவில்லை.

Those who lost money in Aarudhra company besieged BJP office

பாஜக அலுவலகம் முற்றுகை

நீதிமன்றத்திலும் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.  ஆனால் பணத்தை தர எந்த வித நடவடிக்கையும் இதுவரை இல்லையென தெரிவித்தனர். ஆதே நேரத்தில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பாஜகவில் மாநில நிர்வாகியாக இருந்துள்ளனர்.பாஜகவில் மாநில விளையாட்டு பிரிவு நிர்வாகி ஒருவரிடம் மட்டும் 2 ஆயிரம் கோடி அளவிற்கு ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் முதலீடு செய்த பணமானது உள்ளது.  எனவே  இதை எங்களுக்கு மீட்டு கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் மனு கொடுக்க வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்

தமிழ் மொழி மீது இந்தி திணிப்பா..? திடீரென தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios