தமிழ் மொழி மீது இந்தி திணிப்பா..? திடீரென தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி

இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என தெரிவித்த ஆளுநர் ரவி  தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என கூறினார்.

Governor Ravi said that Tamil language is older than Hindi language

ஆளுநரும் தமிழக அரசும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் ஏழாம் பொறுத்தமாக உள்ளது. ஏற்கனவே ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், சட்டசபை நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாகவும், கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இன்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச இருந்தது அணைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்கள் ”தமிழ்நாடு தரிசனம்” என்ற பெயில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டனர்.

Governor Ravi said that Tamil language is older than Hindi language

தமிழ் மொழி பழமையானது

இதனையடுத்து  அந்த மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கலந்துரையாடினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் ரவி பேசுகையில்,  தமிழ் இல்லாமல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்றும் தெரிவித்தார்.  தமிழ் மொழி மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என கூறியவர், 

Governor Ravi said that Tamil language is older than Hindi language

இந்தியை திணிக்க முயற்சியா.?

தமிழை ஆழமாக படிக்க வேண்டும் என்றும் தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும் என்றும் மாணவர்களை கேட்டுக் கொண்டார். இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு என்றும் குறிப்பிட்டார்.  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்படும் எனவும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios