Asianet News TamilAsianet News Tamil

விருதுநகர் சந்தையில் இந்த வாரம் விலை நிலவரம் எப்படி இருக்கு? இதை வாசிங்க...

This week the price situation on the market to be Virudhunagar
this week-the-price-situation-on-the-market-to-be-virud
Author
First Published Apr 17, 2017, 7:37 AM IST


விருதுநகர்

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், கொண்டைக் கடலை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

விருதுநகர் சந்தையில் உளுந்து 100 கிலோ மூட்டைக்கு ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.7 ஆயிரத்து 800 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.9 ஆயிரத்து 600 முதல் ரூ.9 ஆயிரத்து 900 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.7 ஆயிரத்து 200 முதல் ரூ.9 ஆயிரத்து 200 வரையிலும் விற்பனையானது.

துவரை 100 கிலோ மூட்டைக்கு ரூ.4 ஆயிரத்து 700 முதல் ரூ.5 ஆயிரத்து 200 வரையிலும், துவரம் பருப்பு ரூ.9 ஆயிரத்து 200 முதல் ரூ.10 ஆயிரத்து 200 வரையிலும் விற்பனையானது.

பாசிப் பயறு 100 கிலோ மூட்டைக்கு ரூ.6 ஆயிரத்து 900 முதல் ரூ.7 ஆயிரத்து 400 வரையிலும், பாசிபருப்பு 100 கிலோ மூட்டைக்கு ரூ.8 ஆயிரத்து 500 முதல் ரூ.9 ஆயிரத்து 200 வரையிலும் விற்பனையானது.

மல்லி லயன் ரகம் 40 கிலோ மூட்டைக்கு ரூ.3 ஆயிரத்து 200 முதல் ரூ.3 ஆயிரத்து 300 வரை விற்பனையானது.

மல்லி நாடு ரகம் ரூ.3 ஆயிரத்து 200 முதல் ரூ.3 ஆயிரத்து 400 வரையிலும் விற்பனையானது.

வத்தல் குவிண்டாலுக்கு சம்பா ரகம் ரூ.10 ஆயிரத்து 900 முதல் ரூ.11 ஆயிரத்து 200 வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.9 ஆயிரத்து 300 முதல் ரூ.10 ஆயிரத்து 300 வரையிலும், முண்டு வத்தல் குவிண்டாலுக்கு ரூ.14 ஆயிரத்து 800 முதல் ரூ.15 ஆயிரத்து 200 வரையிலும் விலைக்குப் போனது

விருதுநகர் எண்ணெய் சந்தையில் கடலை எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.20 விலை உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 65 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.1 ஆயிரத்து 605 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.1 ஆயிரத்து 350 ஆகவும் விற்பனையானது.

பாமாயில் 15 கிலோவுக்கு ரூ.895 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.2 ஆயிரத்து 890 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

நிலக் கடலை பருப்பு 80 கிலோ மூட்டைக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.6 ஆயிரத்து 600 ஆகவும், கடலை புண்ணாக்கு 100 கிலோ மூட்டைக்கு ரூ.4 ஆயிரத்து 300 ஆகவும், எள் புண்ணாக்கு 65 கிலோ ரூ.1 ஆயிரத்து 820 ஆகவும் விற்பனை ஆனது.

விருதுநகர் சீனி சந்தையில் சீனி குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 230 ஆகவும், கொண்டைக் கடலை குவிண்டாலுக்கு ரூ.500 விலை உயர்ந்து ரூ.7 ஆயிரமாகவும், பொரிகடலை 55 கிலோவுக்கு ரூ.100 விலை உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 710 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.2 ஆயிரத்து 650 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.2 ஆயிரத்து 975 முதல் ரூ.3 ஆயிரத்து 800 வரையிலும், மசூர் பருப்பு ரூ.5 ஆயிரத்து 900 ஆகவும், ரவை 25 கிலோவுக்கு ரூ.1 ஆயிரத்து 42 ஆகவும், மைதா முதல் ரகம் 90 கிலோ ரூ.3 ஆயிரத்து 145 ஆகவும், இரண்டாவது ரகம் ரூ.2 ஆயிரத்து 185 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டா 50 கிலோ ரூ.1 ஆயிரத்து 275 ஆகவும் விற்பனை ஆனது. கோதுமை தவிடு 35 கிலோ ரூ.730 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

விருதுநகர் காபி சந்தையில் காபி பிளாண்டேசன் பிபி ரகம் 50 கிலோ ரூ.13 ஆயிரத்து 250 ஆகவும், ஏ ரகம் ரூ.13 ஆயிரத்து 300 ஆகவும், சி ரகம் ரூ.10 ஆயிரத்து 750 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.7 ஆயிரத்து 850 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.7 ஆயிரத்து 300 ஆகவும் விற்பனை ஆனது.

விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், கொண்டைக் கடலை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. நிலையில் பருப்பு வகைகளின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.  

Follow Us:
Download App:
  • android
  • ios