Asianet News TamilAsianet News Tamil

இந்த பொங்கலுக்கு ரூ.12 கோடி சாராயம் விற்கப்பட்டுள்ளது; போன வருடத்தை விட ரூ.57 இலட்சம் அதிகமாம்...

This pongal is sold for Rs.12 crore 57 lakhs more than last year ...
This pongal is sold for Rs.12 crore 57 lakhs more than last year ...
Author
First Published Jan 19, 2018, 9:09 AM IST


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் போகி, பொங்கல் ஆகிய இரண்டு நாள்களில் ரூ.12 கோடியே 5 இலட்சம் மதிப்பிலான சாராயம் விற்கப்பட்டு உள்ளது.

"திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 180 டாஸ்மாக் சாராயக் கடைகள் இயங்குகின்றன.  இந்தக் கடைகளில் போகிப் பண்டிகையன்று ரூ.4 கோடியே 38 இலட்சம் மதிப்பிலான சாராய புட்டிகள் விறபனையாகி உள்ளன.

பொங்கல் பண்டிகையன்று ரூ.7 கோடியே 67 இலட்சம் மதிப்பிலான சாராய புட்டிகளும் விற்பனையாகி உள்ளன.

இந்த இரண்டு நாள்களில் மட்டும் மொத்தம் ரூ.12 கோடியே 5 இலட்சம் மதிப்பிலான சாராய புட்டிகள் விற்பனையாகி உள்ளன.

போன வருடம் போகிப் பண்டிகையன்று ரூ.3 கோடியே 78 இலட்சத்துக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.7 கோடியே 70 இலட்சத்துக்கும் என மொத்தம் ரூ.11 கோடியே 48 இலட்சத்துக்கு சாராய புட்டிகள் விற்பனையாகின" என்று டாஸ்மாக் அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

போன வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் ரூ.57 இலட்சத்துக்கு கூடுதலாக சாராயம் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios