சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலால் தான் பெற்ற இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியை பற்றி அவருடைய கணவர் விஜய் கண்ணீர் மல்க வாக்கு மூலம் கொடுத்து உள்ளார்.

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலால் தான் பெற்ற இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியை பற்றி அவருடைய கணவர் விஜய் கண்ணீர் மல்க வாக்கு மூலம் கொடுத்து உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அபிராமி மற்றும் அவருடைய கணவருக்கு இடையே அடிக்கடி பிரச்சனை இருந்தாலும், குழந்தைகளை எந்த விதத்திலும் அபிராமி காயப்படுத்தியது கிடையாது.

கடந்த 2 மாதமாக பிரியாணி கடைக்காரரான சுந்தரத்துடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த அபிராமிக்கு, தன் கணவர் மற்றும் குழந்தை, எந்த உறவு பற்றியும் சிறிதும் கவலை இல்லாமல், தன்னுடைய இச்சைக்காக இரண்டு குழந்தைகள் மற்றும் கணவரை கொள்ள முயற்சி செய்து, பாலில் விஷம் கலந்து கொடுத்து தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு, கள்ளக் காதலன் சுந்தரத்துடன் நாகர்கோவில் சென்ற அவரை போலீசார் வளைத்து பிடித்தனர். 

அபிராமியின் இந்த கொடூர செய்கையை நினைத்து கணவர் விஜய் தொடந்து அழுதுக்கொண்டே உள்ளார். தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் இழந்து தவிக்கும், விஜய் தான் வேலை செய்யும் வங்கியில் பணியாற்றும் மற்றொரு பணியாளரிடம்..அபிராமி இதுவரை தன் குழந்தைகளை அடித்தது கூட கிடையாது....

குழந்தைகளின் படிப்பு முதல் அனைத்தையும் சீரும் சிறப்புமாக பார்த்து வந்த அபிராமிக்கு குழந்தைகளை கொல்லும் அளவிற்கு துணிந்தது கள்ளக்காதல் மோகமே என கூறி கண்ணீர் மல்க அழுதுள்ளார் விஜய்.