'ஆவி' படமாக இருந்தாலும் தெர்மாக்கோலை வைத்து மூடமாட்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜுவின் திட்டத்தை நடிகர் கமலஹாசன் திரைப்பட விழா ஒன்றில் கிண்டல் அடித்துள்ளார்.

வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க அதன் மேலே தெர்மாக்கோல் மிதக்கவிடும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். ஆனால், அந்த தெர்மாக்கோல்கள் அடுத்த சில விநாடிகளிலேயே காற்றில் அடித்து செல்லப்பட்டு கிழிந்து கரை ஒதுங்கின.

செல்லூர் ராஜுவின் இந்த திட்டம் குறித்து சமூக வலைதளங்களிலும் மக்களிடையேயும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் இன்று, இயக்குநர் அட்லி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன் பேசுகையில், இந்த திரைப்படம் ஆவியை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் கதையாக இருக்கலாம். ஆனால் ஆவி கதையாக இருந்தாலும் தெர்மாகோல் போட்டு மூடுவதாக இருக்காது என தெரிவித்துள்ளார்.