Asianet News TamilAsianet News Tamil

சிசிடிவி கேமராவை மறைத்த அர்ச்சகர்கள்…. வைரலாகும் வீடியோ…. திருத்தணி முருகன் கோவிலில் ‘அதிர்ச்சி’ சம்பவம்


திருத்தணி முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை அர்ச்சகர்கள் மறைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Thiruthani murugan temple priests hiding the CCTV camera and viral video in social media
Author
Thiruvallur, First Published Nov 20, 2021, 11:55 AM IST

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக இருப்பது  ‘திருத்தணி’ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா,கேரளா என  பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.ஆண்டு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Thiruthani murugan temple priests hiding the CCTV camera and viral video in social media

இங்கு சரவண பொய்கை என்று அழைக்கப்படும் புனித தீர்த்த குளம் இருக்கிறது. வள்ளி மலையில் இருந்து வள்ளியை முருகன் சிறைபிடித்து வந்து திருமணம் செய்து கொண்ட இடமும் திருத்தணி தான். திருத்தணி முருகன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆகும்.குழந்தை வரம், தீர்க்க ஆயுள் போன்றவற்றை முருகன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். பக்தர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை வைத்தும் வழிபடுகின்றனர்.

Thiruthani murugan temple priests hiding the CCTV camera and viral video in social media

திருத்தணி முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர் ஒருவர் தனது அங்கவஸ்திரம் மூலம் சிசிடிவி (CCTV) கேமராவை மூடும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.அந்த அர்ச்சகருடன் கீழ் இன்னொரு அர்ச்சகரும் இருக்கும் அந்த வீடியோ ‘சர்ச்சையை’ ஏற்படுத்தி உள்ளது.இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம்,இந்த சர்ச்சை குறித்து கேள்வி கேட்டபொழுது, திருத்தணி முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை அங்கவஸ்திரம் கொண்டு மறைத்த  2 ஐயர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு எடுக்கபட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரும் தற்போது இடம் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று பதில் அளித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios