Thiruchendur Murugan Koil accident

திருச்செந்தூர் முருகன்கோயிலில் உள்ள பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் 10 ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். 

தற்போது கார்த்திகை மாதம் என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் முருகன்கோயிலின் பிரகார மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. வள்ளி குகைக்கு அருகே உள்ள இந்த பிரகார மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. 

இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் சிக்கியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் ஏதும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த பிரகார மண்டபம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளது. இந்த பிரகார மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.