thermakol pugal minister house function

அமைச்சர் வீட்டு பிரமாண்ட காதுகுத்து..!

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேரன்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் காதுக்குத்து விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில், சொந்த பந்தம் முதல் அரசியல் தலைவர்கள், நண்பர்கள் எனஅனைவருமே வந்துள்ளனர்.விழா எப்படி நடந்தது தெரியுமா..?

விழா ஏற்பாடுகள்

விழா ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் உள்ள கூட்டறவு அதிகாரிகளும் கட்சிக்காரர்களுமே பார்த்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது அமைச்சாரிடம் நம் மதிப்பை பெற வேண்டும் என்பதற்காக, குறைந்தபட்ச தொகையாக அதிக மதிப்பு கொண்ட தொகையை பரிசாக கொடுக்கப் பட்டு உள்ளனராம்.

ஏர்போர்டில் இருந்து விழா நடைபெரும் இடம் வரை வழிநெடுக பிளக்ஸ்போர்டுகள் வாணுயர காணப்பட்டன.எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகள்…போலிஸார் குவிக்கபட்டிருந்தனர்.

முதல்வர் வருகைக்கு பின்,அனைத்து அமைச்சர்களும் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு...அமைச்சர்களில் சீனிவாசன், உதயகுமார், பாஸ்கரன், மணிகண்டன், இராஜேந்திர பாலாஜி, விஜயகுமார் ராஜன் செல்லப்பா,பெரியபுள்ளான்,ஏகே போஸ்,மற்றும் கட்சிகார்ர்கள் அனைவரும் அருகில் இருந்துள்ளனர்...

முதல்வர் முதல் பரிசு..

இந்த விழாவில் முதல்வர் முதல் பரிசு கொடுத்து இடத்தை விட்டு, நகர மற்ற அதிகாரிகள் ஒவ்வொருவராக பரிசை கொடுக்க தொடங்கி உள்ளனர்

அது நீண்டவரிசையாக இருக்க மைக்கில் கட்சிகாரர்களுக்கு வேறுவழியில் அன்பளிப்பை கொடுத்துள்ளனர்.

தகுதிக்கு தகுந்தவாறு மொய் வைத்துள்ளனர்...

அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு சீட்கேட்பவர்களுக்கு தகுதிக்கு தகுந்தவாறு மொய்வைக்கவேண்டும் என யாரோ ஒருவர் இன்பர்மேஷன் சொல்ல, அது தீயா பரவ, தேவை உள்ளவர்கள்....தேவைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை மொய் வைத்தும், மதிப்புமிக்க உயர்ந்த பொருளை கிப்ட் ஆகவும் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Scroll to load tweet…

விழாவில் முதல்வர் பேசியது ...

விழாவில் முதல்வர் பழனிச்சாமியோ ”இது அமைச்சரின் இல்லவிழா அல்ல. அதிமுக வின் குடும்ப விழா செல்லூரார் சோதனையான காலங்களிலும் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர் என தெரிவித்து உள்ளார்

தனி அறையில் விருந்து

செல்லூர் ராஜூ முதல்வர்கள் இருவரையும் கையை பிடித்து தனி அறைக்கு அழைத்துச்சென்று விருந்தளித்து உள்ளார்

இந்த தகவலை "அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் விவராமாக,பிரபல நாளிதலுக்கு தெரிவித்து உள்ளார்.

இதில் சுவாரசியம் என்னவென்றால்,மொய் பணம் மட்டுமே பல கோடியில் வந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது