thermacol hat for traffic police
அக்னி வெயிலை சமாளிக்க சென்னை மாநகரம் முழுவதும் உள்ள போக்குவரத்து போலீஸாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்களாக கோடை வெயில் கொளுத்தி எடுக்குகிறது. இதன் காரணமாக போக்குவரத்து காவலர்கள் அக்கினி வெய்யலில் அகப்பட்டு சோர்வடைந்து விடுகின்றனர். இந்த சோர்வை தணிப்பதற்காக வெயிலை சமாளிக்கும் வகையில் சென்னையில் உள்ள 2,500 போக்குவரத்து போலீஸாருக்கு 2 மோர் பாக்கெட் வீதம், தினமும் 5 ஆயிரம் மோர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சுட்டெரிக்கும் அக்கினி வெயில் காலம் முடியும்வரை போக்குவரத்து போலீஸார் அனைவரும் 'தெர்மா கோல்' மூலம் வடிவமைக்கப்பட்ட சோலார் தொப்பியை அணிந்து கொள்ள போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் அறிவுரை வழங்கியுள்ளார்.இந்த வகை தொப்பிகள் அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் கூறும்போது, ''வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து போலீஸார் அதிக சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ''தெர்மாகோல் தொப்பி'' அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தொப்பி சேதம் அடைந்திருந் தாலோ, தவற விட்டிருந்தாலோ தயக்கம் இல்லாமல் உயர் அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
