there is no value for human protest
திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையத்தில் பலத்த பாதுகாப்புடன் டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் தொழிற்பேட்டை அருகே உள்ள பேருந்துநிலையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால் மக்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் நேற்று மதுக்கடையை ஒட்டி இருந்த பாரை உடைத்து நொறுக்கினர். மேற்கூறை, நாற்காலிகள், குளிர்பான பாட்டில்கள் ஆகியவை சூறையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை விடுவிக்கக்கோரி அப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்தச் சூழலில் மூடப்பட்டிருந்த மதுக்கடை இன்று மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளது.
